ETV Bharat / jagte-raho

கல்குவாரியில் வெடி வைக்கும் போது ஏற்பட்ட விபரீதம் - வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு! - kalkwari explosion in erode district

ஈரோடு: அந்தியூர் அருகே கல்குவாரியில் வெடி வைக்கும் போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

kalkwari-explosion-in-erode-district
author img

By

Published : Oct 17, 2019, 10:42 AM IST

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் பகுதியில் தனியார் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல் குவாரியில் பத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று கல் குவாரியில் பணிபுரிந்து கொண்டிருந்த ஈரோட்டைச் சேர்ந்த செந்தில், சேலத்தைச் சேர்ந்த ஆறுமுகம் ஆகிய இருவரும் பாறைக்கு வெடி வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக வெடிமருந்துகள் வெடித்து சிதறியதில் செந்தில்,ஆறுமுகம் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பின்னர் இது குறித்து, காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை காவல் துறையினர் இருவரது சடலங்களையும் கைப்பற்றி, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.

வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு

இதனைத் தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர், கோபிச்செட்டிபாளையம் கோட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:சிகரெட் குடோனில் தீ விபத்து!

Intro:ஈரோடு ஆனந்த்
அக்.16

கல்குவாரியில் வெடி வைக்கும் போது வெடிவிபத்து - இரு தொழிலாளர்கள் உயிரிழப்பு!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கல்குவாரியில் வெடி வைக்கும் போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Body:ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அம்மாபேட்டையை அடுத்துள்ள ஊமாரெட்டியூர் பகுதியில் செயல்பட்டுவரும் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி (வேலா கிரஷர்) இயங்கி வருகிறது.

இந்த கல் குவாரியில் சுமார் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இன்று கல் குவாரியில் வேலை செய்யும் தொழிலாளர்களான நெருஞ்சிப்பேட்டை, கோவில்கரடு பகுதியைச் சேர்ந்த செந்தில் மற்றும் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அடுத்த சேடப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் ஆகிய இருவரும் பாறைக்கு வெடி வைத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக வெடிமருந்துகள் வெடித்து சிதறியதில் செந்தில் மற்றும் ஆறுமுகம் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர், மற்றும் கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் துறையினர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

Conclusion:சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.