புதுச்சேரியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சாத்தமங்கலம் கிராமத்தில் வாத்து மேய்க்க கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 5 சிறுமிகளை மீட்டு அவர்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் ஒரு சிறுவன் உட்பட இரண்டு பேரை மங்கலம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த், சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடம் மற்றும் மங்கலம் காவல்நிலையத்திற்கு இன்று நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும், சார் பதிவாளர், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மற்றும் புதுச்சேரி குழந்தைகள் நல உறுப்பினர்களிடமும் அவர் விசாரணை ம்ற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்விவகாரத்தில் விசாரணையின் அறிக்கையை டெல்லியில் உள்ள ஆணையத் தலைவரிடம் அளிக்கவுள்ளதாகவும், மேலும் சிலர் விரைவில் இவ்வழக்கில் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 22 வயது இளைஞர் கைது!