விழுப்புரம்-புதுச்சேரி செல்லும் சாலையில் உள்ள கம்பன் நகரில், எஸ்.பி.ஐ., வங்கியின் ஏடிஎம் மையம் ஒன்று செயல்பட்டுவருகிறது. இப்பகுதியில் பள்ளி, கல்லூரி, தொழில் நிறுவனங்கள் அதிகமாக இருப்பதால் வெளி மாவட்ட மாணவ, மாணவிகள், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மக்கள், இந்த ஏ.டி.எம்., இயந்திரத்தைப் பயன்படுத்திவருகின்றனா்.
இந்நிலையில், இன்று காலை அப்பகுதியைச் சோ்ந்த பொது மக்கள் ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்று பாா்த்தபோது, ஏ.டி.எம்., இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தது. மேலும், அங்குள்ள சிசிடிவி கேமிராவும் உடைக்கப்பட்டிருந்தது.
இதைப்பார்த்து அதிா்ச்சியடைந்த அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில், விழுப்புரம் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க...சென்னையில் 110 பேருக்கு கரோனா பாதிப்பு!