ETV Bharat / jagte-raho

மாற்றான் மனைவி மீது மோகம்: சகோதரியின் குடும்பத்தினருக்கு நேர்ந்த பயங்கரம்! - அண்ணனால் தங்கை குடும்பம் உயிரிழப்பு

நாமக்கல்: மாற்றான் மனைவி மீது மோகம் கொண்ட சகோதரனால் அவரது சகோதரி, மைத்துனர் கொலை செய்யப்பட்டனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

Namakkal husband and wife murder
author img

By

Published : Oct 15, 2019, 7:23 PM IST

Updated : Oct 16, 2019, 2:07 AM IST

நாமக்கல் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் விமல்ராஜ். இவர் அதேப் பகுதி அருகேயுள்ள சேந்தமங்கலம் சாலையில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரது மகள் அனிதாவை கடந்த ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்தத் தம்பதி காமரஜர் நகரில் ஆறு மாத குழந்தையுடன் வசித்துவந்தனர்.

In Namakkal husband and wife killed for illegal relationship
விமல்ராஜ்

இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் அனிதா, விமல்ராஜை சரமாரியாக வெட்டினர். இதனைத் தடுக்கவந்த அனிதாவின் தந்தை கருப்பசாமியையும் அந்தக் கும்பல் சரமாரியாகத் தாக்கியது. அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்ததையடுத்து, கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

கொலை செய்யப்பட்ட அனிதா

இதில் படுகாயமடைந்த விமல்ராஜ், அனிதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், உயிருக்குப் போராடிய கருப்பசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த நாமக்கல் காவல் துறையினர் உயிரிழந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில், "அனிதாவின் மூத்த சகோதரர் அருணுக்கும் சேலத்தை சேர்ந்த நிக்கல்சன் என்பவரின் மனைவி சோபனா என்பவருக்கும் திருமண பந்தத்தைத் தாண்டிய உறவை இருந்துள்ளது. இந்த விவகாரம் சோபனாவின் கணவர் நிக்கல்சனுக்கு தெரியவர, அவர் இதனைக் கண்டித்துள்ளார். இருப்பினும் அருணுக்கும் சோபனாவிற்கும் இடையேயான மண உறவைத் தாண்டிய காதல் நீடித்துள்ளது.

அனிதாவின் சகோதரர் அருண்

மேலும் அருணும் சோபனாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் காணொலிகளை அருண், நிக்கல்சனுக்கும் அவரது உறவினர்களுக்கும் வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நிக்கல்சன் உள்ளிட்ட ஆறு பேர் அருணின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அருண் இல்லாததால் அவரின் தங்கை அனிதாவையும் விமல்ராஜையும் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர்" எனத் தெரியவந்துள்ளது.

கொலை செய்த நிக்கல்சன்

நிக்கல்சன் மீது ஏற்கனவே கொள்ளை, வழிப்பறி,கட்டப்பஞ்சாயத்து என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தப்பியோடிய நிக்கல்சன், அவரது கூட்டாளிகளை மூன்று தனிப்படை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

அண்ணனின் மண பந்தத்தைத் தாண்டிய உறவால் தங்கை குடும்பமே கொலையுண்ட பயங்கரம்

அருணின் தங்கை அனிதாவிற்கு கடந்த ஓராண்டிற்கு முன் நிக்கல்சன் திருமணம் செய்து வைத்து தற்போது அனிதா மற்றும் அவரது கணவரை நிக்கல்சன் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Intro:நாமக்கல்லில் அண்ணானின் தவறான உறவால் தங்கையின் குடும்பம் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை.. திருமணம் செய்து வைத்தவரே கொலை செய்த கொடூரம்Body:நாமக்கல் மேட்டு தெருவை சேர்ந்தவர் விமல்ராஜ், பழ வியாபாரம் செய்து வரும் இவர் நாமக்கல் சேந்தமங்கலம் சாலையில் உள்ள காமராஜர் நகரை சேர்ந்த கருப்புசாமி என்பவரது மகள் அனிதாவை கடந்த ஒராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து இளம் தம்பதியினர் காமரஜர் நகரில் 6 மாத குழந்தையுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அனிதா மற்றும் விமல்ராஜை சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. இதனை தடுக்க வந்த அனிதாவின் தந்தை கருப்பசாமியையும் அந்த கும்பல் தாக்கியதாக தெரிகிறது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வர கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த விமல்ராஜ், அனிதா சம்பவ வீட்டிலேயே உயிரிழந்து விட உயிருக்கு போராடிய கருப்பசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த நாமக்கல் போலீசார் உயிரிழந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டதில் அனிதாவின் அண்ணன் அருணுக்கும், சேலத்தை சேர்ந்த நிக்கல்சன் என்பவரின் மனைவி சோபணா என்பவருக்கும் திருமணத்தை தாண்டிய உறவு இருந்துள்ளது. இதனை நிக்கல்சன் கண்டித்துள்ளார். இருப்பினும் அருணுக்கும் நிக்கல்சனின் மனைவி சோபணாவிற்கும் திருமணத்தை தாண்டிய உறவு தொடர்ந்துள்ளது. மேலும் அருணும் சோபணாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அருண் நிக்கல்சனுக்கும் அவரது உறவினர்களுக்கும் வாட்ச் அப்பில் அனுப்பியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த நிக்கல்சன் அருணின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு அருண் இல்லாததால் அருணின் தங்கை அனிதாவையும் அவரது கணவர் விமல்ராஜையும் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் விமல்ராஜ் மற்றும் அவரது மனைவி அனிதாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நிக்கல்சன் மீது ஏற்கனவே கொள்ளை, வழிப்பறி,கட்டப்பஞ்சாயத்து என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. தப்பியோடிய நிக்கல்சன் மற்றும் அவரது கூட்டாளிகளை மூன்று தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

அருணின் தங்கை அனிதாவிற்கு கடந்த ஓராண்டிற்கு முன் நிக்கல்சன் திருமணம் செய்து வைத்து தற்போது அனிதா மற்றும் அவரது கணவரை நிக்கல்சன் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Conclusion:
Last Updated : Oct 16, 2019, 2:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.