ETV Bharat / jagte-raho

வேகமா ஏன் போறேனு கேட்டது குற்றமா? கத்தி குத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது! - மூன்று பேரை காவல் துறையினர் கைது

சென்னை: பம்மல் அருகே இரு சக்கர வாகனத்தில் வேகமாக சென்றவர்களை தட்டி கேட்ட இளைஞர்களை சரமாரியாக வெட்டிய மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

In Chennai, three men arrested, who attacked the youngsters

author img

By

Published : Jan 14, 2021, 5:57 PM IST

சென்னை பம்மல் அடுத்த மூங்கில் ஏரி பகுதியைச் சேர்நதவர் கல்லூரி மாணவர் பிரகாஷ் ராஜ் (19). இவர் நேற்று (ஜன. 14) தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே பேசி கொண்டிருந்தபோது, மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றுள்ளனர்.

அப்போது அதை பிரகாஷ் நண்பர்களுடன் தட்டி கேட்டுள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சண்டை தீவிரமாக, ஆத்திரம் அடைந்த இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் தாங்கள் மறைத்து வைத்துருந்த கத்தியால் சரமாரியாக பிரகாஷ் ராஜை வெட்டிவிட்டு அங்கிருந்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் அவர்களே சென்று புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து காவல் துறையினர் பிரகாஷ் ராஜிடம் நடத்திய விசாரணையில் கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டவர்களே புகார் அளித்ததை கண்டறிந்தனர். பின்னர் சம்பவத்தில் ஈடுபட்ட பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (20), கனேஷ் (18) , தினேஷ் குமார் (19) ஆகியோரை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க...தமிழரும் ஜல்லிக்கட்டும்- வீரம் செறிந்த காதல் கதை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.