நேற்று (ஆக. 15) நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில், அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், விருதுநகரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக ஆமத்தூர் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய சோதனையில், விருதுநகரிலிருந்து சிவகாசி செல்லும் சாலையில் கருப்பசாமி (வயது 22) என்பவர் தனது தோட்டத்தில் வைத்து சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
அதையடுத்து கருப்பசாமியைக் கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்த 90 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்