தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் பூதலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவருக்கும் திருச்சி வாழவந்தான் கோட்டையைச் சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கும் சில ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதியருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த தங்கராஜ் விஜயலட்சுமியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். இதை தடுக்க முயன்ற விஜயலட்சுமியின் சகோதரி கமலம் என்பவரையும் கத்தி, அரிவாளால் தாக்கி வெறியாட்டம் ஆடினார்.
இந்த கொலை சம்பவம் குறித்து பூதலூர் காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தங்கராஜை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தஞ்சை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி, தங்கராஜ் குற்றவாளி எனக்கூறி மூன்று பிரிவுகளின் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன் ஐந்து ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். இந்த அபராத தொகைய கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: காதலை கைவிட மகள் மறுப்பு: ஆற்றில் தள்ளிய பெற்றோர்