திருவையாறு அடுத்த கண்டியூரைச் சேர்ந்தவர் செல்வம் (40). இவருக்குத் திருமணமாகி இருதயமேரி (30) என்ற மனைவியும், மூன்று மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் இருதயமேரி கண்டியூரில் உள்ள ஒரு தனியார் ஊதுபத்தி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தார்.
இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி வேலைக்குச் சென்ற இருதயமேரி வீடு திரும்பவில்லை. அதன்பின்னர், கணவன் செல்வம் பல இடங்களில் தேடியும் மனைவி கிடைக்காததால் திருவையாறு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்தப் புகாரின்பேரில் திருவையாறு காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் ஞானமுருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து காணாமல்போன இருதய மேரியைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: கோயில் பூட்டை உடைத்து சுமார் 10 ஆயிரம் ரூபாய் திருட்டு