சேலம் ஐந்து ரோடு கார்கானா தெருவைச் சேர்ந்தவர் திருநங்கை கண்ணகி (30). இவரும் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த அப்சல் (30) என்பவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். பின்னர், சிறுவன் ஒருவனை தத்து எடுத்து வளர்த்துவந்துள்ளனர்.
இந்நிலையில், அப்சல் தினமும் குடித்துவிட்டு வந்து கண்ணகியை அடித்து உதைத்து சித்ரவதை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அதேபோல், ஒருநாள் கண்ணகியின் பெயரில் உள்ள 20 லட்ச ரூபாய் மதிப்பிலான வீட்டை, தனது பெயருக்கு எழுதிவைக்குமாறு கண்ணகியை கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இதற்கு கண்ணகி மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அப்சல், வளர்ப்பு மகனான பத்து வயது சிறுவனையும் அடித்து உதைத்துள்ளார். கொடுமை பொறுக்காத கண்ணகி, பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் கணவர் அப்சல் மீது இன்று புகாரளித்தார்.
மேலும், சிறுவனை அப்சல் துன்புறுத்தும் காட்சிப்பதிவையும் காவல் ஆய்வாளரிடம் அளித்தார். இதையடுத்து அப்சல் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை கைதுசெய்துள்ளனர்.
இதையும் படிங்க: வழிப்பறி, பட்டாக்கத்தி தாக்குதல் சென்னையில் அதிகரிக்கும் வன்முறை!