ETV Bharat / jagte-raho

வீட்டில் பணி செய்யும்போது இணைய பாதுகாப்பு சிக்கல்களை எவ்வாறு கையாள்வது? - பிஷ்ஷிங் மெயில்

உலகம் முழுவதும் ஹேக்கர்கள் சைபர் குற்றங்களில் ஈடுபட அதிகமாகப் பயன்படுத்தும் பிஷ்ஷிங் மெயில், கரோனா வைரஸ் சூழலில் ஹேக்கர்கள் செய்யும் குற்றங்கள் ஆகியவற்றிலிருந்து எப்படி பாதுகாப்பது என்று விளக்குகிறார் சைபர் பாதுகாப்பு வல்லுநர் இந்தர்ஜித் சிங்.

how-to-deal-with-cyber-security-issues-as-the-world-shifts-to-remote-working

author img

By

Published : Aug 5, 2020, 8:41 AM IST

உலகம் முழுவதும் வணிகத் தொடர்புகள் வீட்டிற்குள் முடங்கியுள்ள நிலையில், சைபர் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. தரவுகளைத் திருடுவது, தனிநபர் விவரங்களை திருடுவது, சேமிப்பை திருடுவது என சைபர் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் சைபர் தாக்குதல் என்றால் என்ன? எத்தனை வகையான சைபர் தாக்குதல்கள் உள்ளது? சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி? என்று பதிலளித்துள்ளார் சைபர் பாதுகாப்பு வல்லுநர் கர்னல். இந்தர்ஜித் சிங்.

பல நிறுவனங்களில் வொர்க் ஃப்ரம் ஹோம்:

கரோனா வைரஸ் பரவியபோது, வொர்க் ஃப்ரம் ஹோம் பணிச் சூழலுக்கு எந்த நிறுவனமும் தயாராக இல்லை. அதே நிலையில், சிறு குறு மற்றும் பெரு நிறுவனங்கள் எதுவும் இதுபோன்ற ஒரு இடர் பிரச்னைகளை இதுவரை சந்தித்ததும் இல்லை. ஆனால் இந்த சூழல் அனைவரையும் வொர்க் ஃபரம் ஹோம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளியது. இப்போது அனைத்து தரப்பு தொழில்களிலும் பணியாளர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்து வருகின்றனர்.

இணைய பாதுகாப்பு சிக்கல்கள்
இணைய பாதுகாப்பு சிக்கல்கள்

இப்போது நிறுவனங்கள் சந்தித்து வரும் பெரும் பிரச்னைகள் என்னவென்றால், மூன்றாம் தரப்பு வணிகர்களுடனான வணிகத் தொடர்ச்சியை பாதுகாக்க முடியாமல் திணறுவது தான். கரோனா வைரசால் தொழிலாளர்கள் எண்ணிக்கைக் குறைவு, இணக்கமான பணி சுழல் இல்லாமல் இருத்தல் ஆகியவை பெரும் சவாலை ஏற்பட்டுள்ளது.

பேரழிவு மீட்புத் திட்டத்தை செயல்படுத்த நிறுவனங்களுக்கு கரோனா வைரஸ் சூழல் வாய்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் வீட்டிலிருந்து பணிபுரிபவர்களுக்கு ஏற்படும் சவால்களை சரிசெய்ய மாற்றுத் திட்டம், சைபர் பாதுகாப்பு ஆகிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதனிடையே வொர்க் ஃப்ரம் ஹோமில் பணி செய்பவர்களுக்கு போதிய கட்டுப்பாடுகள் இல்லாமல், கார்ப்பட்ரேட் தகவல்கள் எளிதாக திருடப்படுவதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

கரோனாவிற்கு பின், சைபர் குற்றங்கள் அதிகரிப்பு:

கரோனா வைரஸ் பரவல் காலத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதைப்பற்றி சைபர் பாதுகாப்பு நிபுணர் இந்தர்ஜித் சிங் பேசுகையில், '' பேரழிவு சூழலைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் அனைத்து துறைகளையும் குறிவைத்துள்ளனர். ஐடி சேவைகளைப் பொறுத்து, ஹெல்த் கேர் துறை பெரிதாக வளர்ந்து வருகிறது.

இதனிடையே கரோனா வைரசிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்க மருந்து நிறுவனங்கள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் சோதனை ரகசியங்களை அறிய பிஷ்ஷிங் மெயில் முறையை ஹேக்கர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

நாம் முன்னர் நினைத்திராத வகையில் அதிகரிக்கும் சைபர் தாக்குதல்களுக்கு எதிராக சுகாதாரத் துறைகள் மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனங்களை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது.

வங்கிகளில் எதிர்கொள்ளப்படும் சைபர் அச்சுறுத்தல்கள்:

சைபர் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்லும் ஒரு துறை வங்கித் துறை மட்டுமே. மற்றத் துறைகளைக் காட்டிலும் வங்கிகளுக்கு சைபர் தாக்குதல்கள் அதிகமாகியுள்ளது. இந்தியாவில் நிதி நிறுவனங்களைக் குறிவைத்து ஹேக்கர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு நாட்டிலும் ஹேக்கர்கள் பல்வேறு முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். இந்தியாவில் நிதி நிறுவனங்கள் குறி வைக்கப்பட்டால், மற்ற நாடுகளில் வேறு நிறுவனங்களையும் துறைகளையும் குறி வைக்கின்றனர். பேரழிவு சூழலில் மக்கள் உடல் மற்றும் மனரீதியாக கஷ்டப்படும்போது, மிகவும் புத்திசாலித்தனத்துடன் ஹேக்கர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

சைபர் பாதுகாப்பில் உள்ள சிக்கல்கள்:

முக்கிய உள்கட்டமைப்பு வசதிகளான மின்சக்தி, தண்ணீர், எண்ணைய் மற்றும் எரிவாயு ஆலைகள், தொலைத்தொடர்பு ஆகிவ துறைகளில் சைபர் தாக்குதல்களை சமாளிப்பது பெரும் கடினம். இதனிடையே கரோனா வைரஸ் சூழலால், பல ஊழியர்களைக் கண்காணிக்க முடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் தீவிரமாக சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் தேசிய அளவில், ஹேக்கர்களிடமிருந்து தரவுகளைப் பாதுகாப்பதே பெரும் சவாலாக உள்ளது.

பிஷ்ஷிங் இ - மெயில் என்றால் என்ன?

பிஷ்ஷிங் இ-மெயில் என்னும் முறையைப் பயன்படுத்தி தான் ஹேக்கர்கள் மால்வேர்களை மக்களின் இ-மெயிலுக்கு அனுப்பி, அவர்களின் மோசடிக்குள் விழவைக்கிறார்கள். கடைசி இரண்டு மாதங்களில் பிஷ்ஷிங் மெயில் எண்ணிக்கை 600 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

உதாரணமாக உலக சுகாதார நிறுவனத்தின் பெயரில் மக்கள் கரோனா வைரசிலிருந்து பாதுகாக்க செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்று வந்த மெயிலை அனுப்புவார்கள். அதனை நாம் திறந்து பார்த்து பதிவிறக்கம் செய்தால், பிரச்னை தொடங்கிவிடும்.

அந்த மெயிலில் உள்ள சந்தேகத்திற்கிடமான இணைப்பைக் கிளிக் செய்தாலோ அல்லது பதிவிறக்கம் செய்தாலோ, அது பயனர்களை சந்தேகத்திற்கிடமான இணைப்பிற்கு சென்றுவிடும். இதன்மூலம் ஹேக்கர்கள் தங்களுக்கு தேவையான தரவுகளை திருட முடியும்” என்றார்.

சைபர் தாக்குதலைத் தடுக்கும் வழிமுறைகள்
சைபர் தாக்குதலைத் தடுக்கும் வழிமுறைகள்

இதனிடையே ஆச்சரியமளிக்கும் விதமாக பிப்ரவரி - மார்ச் மாதங்களில் மட்டும் கரோனா வைரஸ் தொடர்பாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான தளங்கள் தொடங்கப்பட்டது. அதில் அனைத்து தளங்களும் சந்தேகத்திற்கு இடமானவை இல்லை என்றாலும், பலர் சைபர் குற்றங்களில் ஈடுபடும் திட்டங்களுடன் இருந்தவை தான்.

இதையும் படிங்க: குற்றம் 03: உங்கள் அடையாளமும் திருடப்படலாம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.