வேலூர் சத்துவாச்சாரி சாவடி தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (30). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்துவரும் இவருக்கு நேற்று முன்தினம் (டிச. 04) திருமணம் நடந்தது. இந்நிலையில் திடீரென நேற்று (டிச. 05) காலை வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்த நலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து சிஎம்சி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். சிஎம்சியில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தமிழ்ச்செல்வன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தொடர்ந்து அவரது தாய் தவமணி அளித்த புகாரின்பேரில் சத்துவாச்சாரி காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக இறுதி பருவத் தேர்வு ஒத்திவைப்பு!