இது தொடர்பாக விகாராபாத் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எம். நாராயணா கூறியதாவது:
உள்ளூர்வாசிகளிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் குழுவுடன் சொன்றோம். அங்கு ஆய்வு மேற்கொண்டதில் அடையாளம் தெரியாமல், பாதி எரிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க இந்த பெண், கட்டை கற்களால் தாக்கப்பட்டு இறந்திருக்கலாம். அதன் பின்னர் அவரது உடல் எரிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
அந்த பெண்ணின் உடல் அருகே பீர், மது, தண்ணீர் பாட்டில்களும், இரண்டு பிளாஸ்டிக் கிளாஸ்களும் இருந்தன. எனவே இரண்டுக்கும் மேற்பட்ட நபர்கள் மது அருந்திய பின் கொலை நிகழ்ந்திருக்கலாம். இந்தச் சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 302-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாமல் பாதி எரிக்கப்பட்டு இறந்த பெண் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
விகாராபாத் மாவட்டம் சோமன்குருதி கிராமம் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்தச் சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மது வாங்குவதில் தகராறு - மீன் வியாபாரி அடித்துக் கொலை