திருவள்ளூவர் அம்பத்தூரை சேர்ந்தவர் கிஷோர். இவர் ஆவடி காந்தி நகரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தினமும் ஆவடி சுற்றியுள்ள பகுதிகளில் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியவர்களிடம் இருந்து பணத்தை வசூலித்து வருவார்.
இந்நிலையில் நேற்று காலை ஆவடி அடுத்த பூச்சி அத்திப்பட்டில் மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் இருந்து கடன் தொகையை வசூல் செய்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
அப்போது ஆவடி அருகே கள்ளிகுப்பம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது ஒரு பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்துள்ளனர். பின்னர் அவர்களில் ஒருவன் கையில் வைத்துள்ள மிளகாய் பொடியை கிஷோர் உடல் மீது வீசியுள்ளார். மேலும் இருவர் அவரை கத்தியை காட்டி மிரட்டி அவர் மொபைட்டில் இருந்த கைப்பையை பறித்து, தப்பி சென்றுள்ளனர்.
இதுகுறித்து கிஷோர் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஜெய் கிருஷ்ணன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக்கில் இருந்து வழிப்பறி செய்த நபர்களை தேடி வருகின்றனர்.இச்சம்பவம் ஆவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.