ETV Bharat / jagte-raho

ஜி.ஆர்.டி.யில் பல கோடி தங்க, வைர நகைகள் அபேஸ்! - chennai grt

சென்னை: ஜி.ஆர்.டி. நகைக்கடைகளில் பல கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

gold theft in chennai grt
author img

By

Published : May 2, 2019, 4:44 PM IST

சென்னை தியாகராயநகரில் ஜி.ஆர்.டி. நகைக்கடை இயங்கிவருகிறது. இதில் பணிபுரிந்த சென்னை ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த ரவிக்குமார் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றதாக நகைக்கடை மேலாளர் பிரபாகரன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

ரவிக்குமார் கடந்த 10 ஆண்டுகளாக கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். 2,379 வைர கற்களால் செய்யப்பட்ட எட்டு வைர வளையல், ஒரு ஜிமிக்கி - 1, கம்மல் - 2, நெக்லஸ்-2, உள்ளிட்டவை காணவில்லை என்றும், அதே போல 271 கிராம் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் அப்புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருடுபோன நகைகளின் மதிப்பு இரண்டு கோடியாகும்.

இந்நிலையில், ஜி.ஆர்.டி. நகைக்கடை சார்பில் ரவிக்குமாருக்கு நெருக்கடி கொடுத்ததன் காரணமாக தற்கொலை அவர் செய்து கொண்டதாக தெரிகிறது. கொள்ளையடிக்கப்பட்ட நகையில் பாதிக்கும் மேற்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரவிக்குமாரின் உறவினர்கள் மூன்று பேரிடம் தற்போது தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது.

சென்னையில் ஜி.ஆர்.டி நகைக் கடைகள் பல லட்சம் மதிப்பிலான வைரம் மற்றும் தங்க நகை கொள்ளை ஊழியர் தற்கொலை போலீசார் தீவிர விசாரணை.

சென்னை தியாகராயநகரில் பிரபல தங்க நகை மாளிகையான ஜிஆர்டி என்கிற நகை கடை இயங்கி வருகிறது. இதில் வேலை பார்த்த சென்னை ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த ரவிக்குமார் நகைகளை கொள்ளை எடுத்துச் சென்றதாக நகைக்கடை மேலாளர் பிரபாகரன் புகாரில்  தெரிவித்துள்ளார்.

கொள்ளையடித்த ரவிக்குமார் கடந்த 10 ஆண்டுகளாக கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். 2379 டைமண்ட் கற்களால் செய்யப்பட்ட எட்டு டைமண்ட் வளையல், ஒரு ஜிமிக்கி - 1, கம்மல் - 2,  நெக்லஸ்-2, உள்ளிட்டவை காணவில்லை என்றும் அதே போல 271 கிராம் தங்க நகைகள் கொள்ளையடிக்கப் பட்டதாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு2 கோடி யாகும்

ஜி ஆர் டி நகைக்கடை சார்பில் ஊழியர் ரவிக்குமாரை நெருக்கடி கொடுத்து அதன் காரணமாக ரவிக்குமார் தற்கொலை செய்து கொண்டார். கொள்ளையடிக்கப்பட்ட நகையில் பாதிக்கும் மேற்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரவிக்குமாரின் உறவினர்கள் 3 பேரிடம் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.