ETV Bharat / jagte-raho

துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் தங்கக்கடத்தல்! - துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் தங்கக்கடத்தல்

சென்னை: துபாயிலிருந்து சென்னை வந்த மீட்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 1.40 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு 3 பெண் பயணிகள் கைது செய்யப்பட்டனா்.

seized
seized
author img

By

Published : Nov 24, 2020, 6:34 PM IST

துபாயிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் மீட்பு விமானம், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு இன்று வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது, புதுக்கோட்டையை சோ்ந்த உமகொலுசு பீவி (49), மஹரீவா பீவி (51), மதுரையை சோ்ந்த குணசுந்தரி (35) ஆகிய 3 பெண்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவா்களை தனி அறைக்கு அழைத்துச்சென்று பெண் அதிகாரிகள் சோதித்தனர்.

அப்போது ஆடைகளுக்குள் 689 கிராம் தங்கக்கட்டிகள், தங்க பேஸ்ட்கள் ஆகியவற்றை அவர்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.31.41 லட்சம் ஆகும். மேலும், அவா்கள் வந்த விமானத்திற்குள் சென்று பார்த்தபோது, அங்கு ஒரு இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த துணி பையிலிருந்து, 802 கிராம் தங்கம் இருந்தது. அதன் மதிப்பு ரூ.41.71 லட்சம். அதையும் அதிகாரிகள் கைப்பற்றினா்.

துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் தங்கக்கடத்தல்!

மொத்தமாக ரூ.73.12 லட்சம் மதிப்புடைய 1.4 கிலோ தங்கத்தை கைப்பற்றிய சுங்கத்துறை அதிகாரிகள், அந்த 3 பெண் பயணிகளையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதையும் படிங்க: தேனி அருகே போலி மருத்துவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.