திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த துரிஞ்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன், ஷோபனா தம்பதியினர். இவர்கள் மேல்வணக்கம்பாடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் ஷோபனா கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.
அப்போது தம்பதியினர் கூச்சலிட்டதால், இரு சக்கர வாகனத்தில் தப்பியோடிய இருவரையும் அப்பகுதி மக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். இருவரும் கத்தியைக் காட்டி மிரட்டியதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவர்களை சரமாரியாகத் தாக்கி, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கட்டிவைத்தனர்.
பின்னர் இது குறித்து தகவலறிந்து வந்த, மேல்செங்கம் காவல் துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், இருவரும் திருப்பத்தூர், பள்ளத்தூர் பகுதியைச் சேர்ந்த சுதாகர், சம்பத் ஆகியோர் என்பது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 10 சவரன் தங்க நகை பறிப்பு - குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு!