உத்தரப் பிரதேச மாநிலத்தின் சந்தவுசி பகுதியைச் சேர்ந்தவர் கிருத்த கவுஷல். இவர் மே 3ஆம் தேதி வரதட்சணை பிரச்னை காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதில் சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை காவல் துறையினரால் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் கிருத்தி கவுஷலின் சகோதிரி பல்லவி கவுஷல், #JusticeForKirti என்ற ஹேஷ்டாக் மூலம் ட்விட்டரில் நீதி கோரியுள்ளார். அதில், ''எனது சகோதிரி வரதட்சணை கொடுமை காரணமாக மே 3ஆம் தேதி உயிரிழந்தார். இதற்கு காரணமான விபின் குமார், நீத்து, ருத்ராக்ஷி ஆகியோர் இதுவரை கைது செய்யப்படவில்லை'' எனப் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அப்பகுதி காவல் துறை அலுவலர் அசோக் குமார் சிங் பேசுகையில், ''நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்கியிருக்கும் இடங்களை அறிய முயற்சித்து வருகிறோம். லாக் டவுன் முடிந்த பின் நிச்சயம் உயிரிழப்புக்கு காரணமான அனைவரும் கைது செய்யப்படுவார்கள்'' என்றார்.
இதையும் படிங்க: எஜமானரைக் காப்பாற்ற நாட்டு வெடிகுண்டை கவ்விய நாய்க்குட்டி!