ETV Bharat / jagte-raho

ஆசைவார்த்தைக் கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன் மீது புகார்! - ஆம்பூர் கிராமியக் காவல் நிலையம்

திருப்பத்தூர்: பாலூர் அருகே காதலித்து திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகூறி 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன் மீது அச்சிறுமியின் தந்தை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

திருப்பத்தூர் செய்திகள்
திருப்பத்தூரில் தன் பெண்ணை ஏமாற்றிய காதலன்மீது குடும்பத்துடன் புகார் அளித்த நபர்
author img

By

Published : Jan 29, 2020, 2:19 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் என்பவரது மகன் அரவிந்த் (22). பாலூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி சபீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இருவரும் ஊரின் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாகப் படித்தபோது இவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியுள்ளது. தன் பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு வீட்டிலேயே இருந்தவந்த சபீனாவும், அரவிந்தும் தொடர்ந்து சந்தித்துவந்துள்ளனர்.

தொடர்ந்து சபீனாவைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி அவருடனான உறவை அரவிந்த் தொடர்ந்த நிலையில், தான் கர்ப்பம் அடைந்திருப்பதையறிந்த சபீனா, கடந்த 21ஆம் தேதி தன் வீட்டைவிட்டு வெளியேறி அரவிந்தனுடன் சென்றுள்ளார். மகள் திடீரென காணாமல்போனதால் அதிர்ச்சியடைந்த சபீனாவின் தந்தை, தன் மகளைக் காணவில்லை எனக் கடந்த 22ஆம் தேதி ஆம்பூர் கிராமியக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திருப்பத்தூரில் தனது மகளை ஏமாற்றிய காதலன் மீது தந்தை புகார்

சிறுமியின் தந்தை புகார் அளித்ததைத் தொடர்ந்து, இரண்டு நாட்கள் கழித்து சபீனாவை அவரது வீட்டருகே விட்டுவிட்டு, அரவிந்த் தலைமறைவாகியுள்ளார். வீடு திரும்பிய சபீனாவை அவரது பெற்றோர் விசாரித்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் அடுத்து வந்த நாள்களில் ஆம்பூர் கிராமியக் காவல் நிலையத்தில் அளித்த புகாரை திரும்பப் பெறுமாறும், இல்லையென்றால் ஷபீனாவையும், அவரது குடும்பத்தினரையும் கொலைசெய்துவிடுவதாகவும் அடியாட்களைக் கொண்டு அரவிந்த் தொலைபேசி வாயிலாக மிரட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மனமுடைந்த சபீனாவின் தந்தை, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், தனது குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு வழங்கக்கோரியும் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் காவல் துறையினர் தலைமறைவாகியுள்ள அரவிந்தை தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக விஜயகுமார் ஐபிஎஸ் பதவியேற்பு..!

Intro:Body:ஆம்பூர் அருகே 17 வயது இளம்பெண்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய காதலன் மீது இளம்பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் புகார்....

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர், புதூர் பகுதியை சேர்ந்த ஆனந்தன் இவரது மகன் அரவிந்த் (22) இவரும் பாலூர் பகுதியை சேர்ந்த சபீனா 17 ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் இந்த நிலையில் 2 வருடங்களுக்கு முன்பு இருவரும் அங்குள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.பின்னர் சபீனா 10 ம் வகுப்பு படித்து விட்டு வீட்டிலேயே இருந்த நிலையில் அரவிந்த் அடிக்கடி சபினா வீட்டருகே சென்று அவரை சந்தித்து ஆசை வார்த்தை கூறி இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து சபீனாவை திருமணம் செய்துகொலவ்தாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியுள்ளார்.... இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்த சபீனா கடந்த 21 ஆம் தேதி அரவிந்தனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்...

இதனால் மகள் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த சபீனாவின் தந்தை ஷபீர் மகள் காணவில்லை என கடந்த 22 ந்தேதி ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ...

புகார் அளித்தது தெரிந்து கொண்ட அரவிந்த் இரண்டு நாட்கள் கழித்து சபீனாவை அவரது வீட்டருகே அழைத்து வந்து விட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளார் இரண்டு நாட்கள் கழித்து வீடு திரும்பிய சபீனாவை பெற்றோர் விசாரித்த போது கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது....

இதனையடுத்து சபினாவின் தந்தை ஷபீர் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் அளித்த புகாரை வாபஸ் பெறுமாறும் இல்லையென்றால் உனது மகள் மற்றும் குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவதாக அரவிந்த் அவரது அடியாட்கள் தொலைபேசியில் மிரட்டியுள்ளனர்....

இதனால் தன்னுடைய மகளை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறிவிட்டு பின்னர் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் சபீனாவை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகவும் இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததை திரும்ப பெற கொலை மிரட்டல் விடுத்ததை தொடர்ந்தும் சபீனாவின் பெற்றோர் ஆம்பூர் அனைத்து மகளீர் காவல்நிலையத்தில் தன்னுடைய மகளை கர்ப்பமாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கவும்,மேலும் பெண்ணின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று மீண்டும் இன்று புகார் அளித்துள்ளதார்...

இது குறித்து சபினாவின் தந்தை ஷபீர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தலைமறைவாகியுள்ள இளைஞரை தேடிவருகின்றனர்....Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.