கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே தொடுகுளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வின். திமுக மாவட்ட பிரதிநிதியான செல்வின் வீட்டிற்கு அருகில், கஞ்சா விற்பனை கும்பலைச் சேர்ந்தவர்கள் பொதுமக்களுக்கு இடையூறாகக் கெட்டவார்த்தை பேசியுள்ளனர்.
அதனை செல்வின் தட்டிக்கேட்டுள்ளார். அதனால் கோபமடைந்த கஞ்சா விற்பனை கும்பல், அவர்களுடைய நண்பர்களுக்கு தகவல் கொடுத்ததன் பேரில் 15 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தனர்.
பின்னர் அப்பகுதிக்கு வந்த கஞ்சா விற்பனை கும்பல் செல்வினை அரிவாளால் வெட்டி சாய்த்தனர். இந்தச் சத்தம் கேட்டுவந்த அவரது தந்தை பால்ராஜ், உறவினர்கள் கனகராஜ், யேசுதாஸ் ஆகியோரையும் கும்பல் வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். அதில் யேசுதாஸ் என்பவரின் கை ஒடிந்தும் கனகராஜ் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இது குறித்து மார்த்தாண்டம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கஞ்சா விற்பனை கும்பலைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: கடத்தல் கும்பலைப் பிடிக்கச் சென்ற மக்களை கார் ஏற்றி கொல்ல முயற்சி!