நாகப்பட்டினம்: பெண்ணின் வாயைப் பொத்தி கோயிலுக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகதோப்பு அருகே கட்டட வேலை செய்யும் கணவனை இழந்த கைம்பெண்ணுக்குதான் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. அவரை கோயிலுக்குள் இழுத்துச்சென்று இரு இளைஞர்கள் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். அவர் வைத்திருந்த கூலிப் பணத்தையும் பிடுங்கிச் சென்றுள்ளனர்.
தனியாக வசித்து வந்த இவர் இரவு நேரத்தில் அவரது சகோதரி வீட்டிற்கு சென்று இரவு தங்குவார் என்று கூறப்படுகிறது. அதுபோல் நேற்றிரவும் சகோதரி வீட்டுக்கு செல்லும் வழியில் தான், இளைஞர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை கோயிலுக்குள் இழுத்துச் சென்றுள்ளனர்.
தகவலறிந்த காவல் துறையினர் வண்டிப்பேட்டையைச் சேர்ந்த அருண்ராஜ், தாமரைகுளத்தைச் சேர்ந்த ஆனந்த் ஆகிய இரு இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை - உயர் அலுவலர் கைது
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. காமாட்சி அம்மன் கோயில் உள்ளே நேற்றிரவு 9 மணிக்கு இழுத்துச் சென்று அதிகாலை 2 மணிக்குதான் அப்பெண்ணை விடுவித்துள்ளனர்.
தொடர்ந்து பெண்ணின் வீட்டுக்குச் சென்று, உறவினர்களை மிரட்டி சென்றதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.