ETV Bharat / jagte-raho

திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்த இளைஞர் படுகொலை - 5 பேர் கைது

author img

By

Published : Oct 2, 2019, 10:59 AM IST

விழுப்புரம்: திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்த இளைஞரை வெட்டி படுகொலை செய்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குற்றவாளிகள்

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த மூலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(35). இவர், உளுந்தூர்பேட்டையில் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் காலை வழக்கம்போல் தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் உளுந்தூர்பேட்டைக்கு வந்து கொண்டிருந்தார்.

மூலசத்திரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, எதிரே காரில் வந்த அடையாளம் தெரியாத கும்பல், இருசக்கர வாகனத்தை வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகள்

தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, கொலைக் கும்பல் மலையனூர் அருகே பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற காவல்துறையினர், அங்கு பதுங்கியருந்த கொலையாளிகள் ஐந்து பேரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் விசாரணை செய்ததில் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்த விவகாரத்தில், மணிகண்டனை அந்த கும்பல் கொலை செய்திருப்பது தெரியவந்தது. பின்னர் ஐந்து பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:மரியாதையாக அமமுகவில் இணைந்துவிடு -மிரட்டல் விடுத்த முன்னாள் கவுன்சிலர்

Intro:tn_vpm_01_murder_aquest_arrest_vis_tn10026Body:tn_vpm_01_murder_aquest_arrest_vis_tn10026Conclusion:கடன் கொடுத்து வாங்குவதன் மூலம் கள்ளக்காதல் ஏற்பட்டதால் போட்டோ ஸ்டுடியோ உரிமையாளரை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து கொலையாளிகளை போலீசார் கைது செய்தனர் - மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் விசாரணை

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மூலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 35 இவர் உளுந்தூர்பேட்டையில் போட்டோ ஸ்டுடியோ கடை வைத்துள்ளார். திங்கட்கிழமை காலை வழக்கம்போல் தனது வீட்டிலிருந்து உளுந்தூர்பேட்டையில் போட்டோ ஸ்டுடியோ கடையை திறப்பதற்காக இருசக்கர வாகனத்தில் தனியாக வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது மணிகண்டன் இருசக்கர வாகனத்தில மூலசமுத்திரம் பகுதியில் உள்ள துணை மின் நிலையம் எதிரே வந்தபோது எதிரில் ஒரு காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தை இடித்து சாலையின் வலது புறத்தில் இருந்த பள்ளத்தில் தள்ளியுள்ளனர் பின்னர் காரில் இருந்து இறங்கி வந்த 6பேர் கொண்ட கும்பல் அவர்கள் காரில் வைத்திருந்த பட்டாக் கத்தியை எடுத்துக்கொண்டு சினிமா பட காட்சிபோல் இறங்கி வந்து மணிகண்டனின் உடலில் பல இடங்களில் கத்தியால் சரமாரியாகக் குத்தியும் வெட்டியும் கொலை செய்தனர் ரத்த வெள்ளத்தில் கிடந்த மணிகண்டனை பார்த்த அந்த கும்பல் உடனடியாக அங்கிருந்து காரை நிறுத்தி விட்டு உடனடியாக நான்கு புறங்களிலும் சிதறி ஓடினர் இதை அப்பகுதி மக்கள் நேரில் பார்த்ததோடு உடனடியாக அவர்கள் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் எழிலரசி மற்றும் போலீசார் ரத்தவெள்ளத்தில் கிடந்த மணிகண்டனின் உடலை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து.

உடனே இந்த கொலை சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். தப்பி ஓடிய கொலையாளிகள் மலையனூர்கிராமம் அருகே பதுங்கியிருந்த 1.ஓலையனூர் கிராமத்தை சேர்ந்த தெய்வமணி (33), 2.பரிந்தல் கிராமத்தை சேர்ந்து பிரேம்குமார் (28), பெங்களூரைச் சேர்ந்த 3.சுனில் (18), 4.நவின்(19), 5.சேத்தன் (20), ஆகியோரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை செய்ததில் மணிகண்டனை திட்டம்போட்டு வெட்டி படுகொலை செய்ததை ஒப்புக் கொண்டார். மேலும் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் விசாரணை செய்தார். பின்னர் ஐந்து நபர்களையும் கொலை வழக்கில் பதிவு செய்து கொலைக்கு பயன்படுத்திய ஒரு கார், நான்கு வீச்சருவாள், செல்போன்கள்,காருக்கு பயன்படுத்திய டூப்ளிகேட் நம்பர் பிளேட் பறிமுதல் செய்து கடலூர் மத்திய சிறையில், அடைந்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.