தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பத்தடி பாலத்தைச் சேர்ந்தவர்கள் பாண்டி - ரேணுகாதேவி தம்பதியினர். இவர்களுக்கு சோபனா (13), லாவன்யா (11), ஹரீஸ்(9), ஸ்ரீமதி (7), குணசேகரன் (5) என 5 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடிபோதையில் இருந்த பாண்டிக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடந்த 17 ஆம் தேதி மாலை தகராறு ஏற்பட்டுள்ளது.
தன்னுடைய இரு மகள்களான லாவன்யா, ஸ்ரீமதி ஆகியோரை அழைத்து கொண்டு அரசலாற்று பாலத்துக்கு அருகே வந்த பாண்டி திடீரென இருவரையும் ஆற்றில் தூக்கி வீசியுள்ளார். ஆற்றில் விழுந்த லாவன்யா கூச்சலிட்டதும், ஆற்றின் கரைகளில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் லாவன்யாவை காப்பாற்றினர்.
ஆனால் ஸ்ரீமதி பற்றி எந்த தகவலும் வராத நிலையில் தீயணைப்பு துறையினர், காவல்துறையினர், இளைஞர்கள் மூன்று நாட்களாகத் தேடி வருகின்றனர். இந்நிலையில் தன் மகளை இழந்த ரேணுகாதேவி வீட்டை பூட்டிவிட்டு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கும்பகோணம் தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க: