திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் வயது (25). அதே பகுதியில் எதிர் வீட்டில் வசித்து வருபவர் நிர்மல் குமார் வயது(22). இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை ராஜ்குமார், அவரது தந்தையுடன் பணிக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து புறப்பட தயாரானார். அப்போது எதிர் வீட்டில் வசிக்கும் நிர்மல் குமார் அரிவாளால் தந்தை, மகனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
![தந்தை மகனுக்கு அரிவாள் வெட்டு திருத்தணி Thiruthani Cut the sickle to the father's son Thiruvallur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4323681_thiru-1.jpg)
இதில் பலத்த காயமடைந்த அவர்கள் இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து திருத்தணி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிர்மல் குமாரை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இக்கொலை முயற்சி சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.