அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர், மனவளர்ச்சி குன்றிய 32 வயதான பெண். இவரை அப்பகுதியைச் சேர்ந்த குமார், அவரது மகன் கார்த்திக் ஆகிய இருவரும் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக ஜூன் 12ஆம் தேதி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தின்கீழ், நடவடிக்கை எடுக்க ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளருக்கு பரிந்துரை செய்தார்.
அவரின் பரிந்துரையை மாவட்ட கண்காணிப்பாளருக்கு அனுப்பியதில், மாவட்ட ஆட்சியர் இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.