ETV Bharat / jagte-raho

கொலை குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி குடும்பத்துடன் மனு!

கிருஷ்ணகிரி: நிதி நிறுவன அதிபரை கடத்திக் கொலை செய்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்க வந்த லட்சுமணனின் குடும்பத்தினர்
author img

By

Published : Sep 1, 2019, 10:11 AM IST

கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்னமுத்தூரைச் சேர்தவர் லட்சுமணன். பல ஆண்டுகளாக நிதி நிறுவனம் நடத்தி வந்த இவரை, கடந்த ஜூலை மாதம் கடத்திச் சென்று கொலை செய்து, தருமபுரி மாவட்டம் - காரிமங்கலத்தில் உள்ள ஏரியில் குழி தோண்டி புதைத்துவிட்டு, அவரிடமிருந்த நூறு பவுன் தங்க நகை, 50 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு, கொலையாளிகள் தப்பிச் சென்றனர்.

இதுதொடர்பாக, காவேரிபட்டினம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், ரங்கநாதன் என்பவரை கைது செய்தனர். ஆனால் இந்தக் கொலை வழக்கில் இதுவரை முக்கிய குற்றவாளிகளை கைது செய்யாமல் காவேரிப்படினம் காவல் துறையினர் அலட்சியம் காட்டி வருவதாகக் கூறி லட்சுமணனின் குடும்பத்தினர் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டிட் கங்காதரைச் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்க வந்த லட்சுமணனின் குடும்பத்தினர்

மேலும், இதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், லட்சுமணனை கொலை செய்த முக்கிய குற்றவாளிகளை கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை மீட்டுத் தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Intro:கிருஷ்ணகிரி அருகே நிதி நிறுவன அதிபரை கடத்தி கொலை செய்த வழக்கில், முக்கிய குற்றவாளிகளை  கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கும் காவல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, உண்மை கொலைக் குற்றவாளிகளை  கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு. Body:
கிருஷ்ணகிரி அருகே உள்ள சினனமுத்தூரை சேர்தவர் லட்சுமணன். இவர் கடந்த பல ஆண்டுகளாக நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். கடந்த ஜூலை மாதம் லட்சுமணனை கடத்தி சென்று, அவரை கொலை செய்து, தர்மபுரி மாவட்டம் - காரிமங்கலத்தில் உள்ள ஏரியில் குழி தோண்டி புதைத்துவிட்டு, அவரிடமிருந்த நூறு பவுன் தங்க நகை மற்றும் 50 லடசம் பணத்தை கொள்ளையடித்துவிட்டு, கொலையாளிகள் தப்பிச் சென்றனர்.
இது தொடர்பாக காவேரிபட்டிணம் காவல் காறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், ரங்கநாதன் என்பவரை கைது செய்துள்ளனர் ஆனால் இந்தக் கொலை வழக்கில் இதுவரை முக்கிய குற்றவாளிகளை கைது செய்யாமல் காவேரிப்படிணம் காவல்துறையினர் அலட்சியம் காட்டி வருவதால்,  பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டிட் கங்காதரை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர்..
அப்போது நிதி நிறுவன அதிபர் லட்சுமணனை கொலை  செய்துவிட்டு, அவரிடமிருந்து 50 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் நூறு பவுன் தங்க நகை, சொத்து .பத்திரம் உள்ளிட்ட பல முக்கிய பத்திரங்களை, கொலையாளிகள் எடுத்து சென்றுள்ளனர், ஆனால் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்றும், இது குறித்து காவேரிப்பட்டிணம் காவல் நிலையத்தில் கேட்டால் சரியான பதில் கூறமால் மிரட்டி வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர். மேலும் இதனால் மன உழைச்சல் ஏற்பட்டுள்ளதால், எங்களுக்கு உரிய நீதிக்கிடைக்க வேண்டும். லட்சுமணனை கொலை செய்த முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை மீட்டு தர வேண்டும் எனக்கோரி, கொலை செய்யப்பட்ட லட்சுமணனின் மகன் கோரிக்க விடுத்தார்.
தகப்பனை கொன்ற முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, குடும்பத்தினர் மனு கொடுக்க வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.