திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் பகுதியில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வருபவர் சிவா. இவரது நிறுவனத்திற்கு நேற்று மாலை வந்த இருவர் தங்களை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் என அறிமுகப் படுத்திக் கொண்டு அந்த நிறுவனத்தில் பல்வேறு குறைபாடு உள்ளதாகவும் பணம் கொடுத்தால் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் மீது சிவாவிற்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களிடம் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுள்ளார். இதனையடுத்து சுதாரித்து கொண்ட இருவரும் அங்கிருந்து தப்பிக்க முயன்ற போது அவர்களை அருகில் இருந்தவர்கள் உதவியுடன் பிடித்த சிவா அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இருவரிடமும் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் கோவையைச் சேர்ந்த குமார் (45), முருகன் (56) ஆகியோர் என்பதும் இவர்கள் இருவரும் திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் பின்னலாடை நிறுவனங்களில் மோசடியில் ஈடுபட்டு பணம் பறித்துள்ளனர் என்பதும் தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் இருந்த போலியான தொழிலாளர் நலத்துறை அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படியுங்க: