ETV Bharat / jagte-raho

வண்டி சக்கரத்தில் மயங்கி விழுந்த முதியவர்: சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்! - ஈரோடு விபத்து சிசிடிவி

புஞ்சை புளியம்பட்டியில் சாலையில் நடந்து சென்ற முதியவர் மயக்கமடைந்து சிறிய ரக சரக்கு வாகனத்தின் சக்கரத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான கண்காணிப்பு படக்கருவியின் பதிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

erode accident cctv, erode puliyampatti accident cctv, ஈரோடு விபத்து சிசிடிவி, ஈரோடு புளியம்பட்டி விபத்து சிசிடிவி
erode puliyampatti accident cctv
author img

By

Published : Nov 20, 2020, 11:03 AM IST

ஈரோடு: புஞ்சை புளியம்பட்டியில் சாலையில் நடந்து சென்ற முதியவர் மயக்கமடைந்து சிறிய ரக சரக்கு வாகனத்தின் சக்கரத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகேயுள்ள இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கன் (70). இவர் நவம்பர் 3ஆம் தேதி சத்தியமங்கலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில், புஞ்சை புளியம்பட்டி நால்ரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

ஈரோடு புளியம்பட்டி சாலை விபத்து குறித்த காணொலி

அப்பகுதியிலுள்ள பெட்ரோல் விற்பனையகத்தின் அருகே நடந்து சென்றபோது, ரங்கனுக்கு மயக்கம் ஏற்பட்டதால் சாலையில் சாய்ந்து விழுந்தார். அவ்வேளையில் அந்த வழியாகச் சென்ற சிறிய ரக சரக்கு வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது இது தொடர்பான கண்காணிப்புப் படக்கருவியின் பதிவுகள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.