ETV Bharat / jagte-raho

தாறுமாறாக ஓடிய அரசுப் பேருந்து: நால்வர் உயிரிழப்பு! - ஈரோடு விபத்தில் நால்வர் பலி

சிவகிரியிலிருந்து ஈரோடு சென்ற அரசுப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உள்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

erode bus accident killed four
erode bus accident killed four
author img

By

Published : Sep 3, 2020, 11:39 AM IST

ஈரோடு மாவட்டம் சிவகிரி அரசுப் பேருந்து நிலையத்திலிருந்து, ஈரோடு நோக்கி 42 என்ற எண் கொண்ட அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. பேருந்து லக்காபுரம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிரே வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மொடக்குறிச்சி காவல் துறையினர், பேருந்தை அப்புறப்படுத்தியபோது, அதன் அடிப்பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்களும், அதில் பயணித்த நான்கு பேரின் உடல்களும் இருந்தது தெரியவந்தது.

மேலும், பேருந்தில் பயணித்த பயணிகள் மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனிடையே அவசர ஊர்தி மூலம் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பிவைத்தனர். அத்தோடு காயமடைந்த பயணிகளுக்கு முதலுதவி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மொடக்குறிச்சி குளூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி, மரகதம், பாவையம்மாள், மோகனாபுரி ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர்தான் இந்த விபத்தில் இறந்தது தெரியவந்தது.

கரோனா தொற்றால் முழு ஊரடங்கிலிருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு, பொதுப் போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையில், இந்தக்கோர விபத்து வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.