வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த இர்ஃபான் என்ற மாணவர் தருமபுரி மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்தார். மருத்துவக் கல்வி நீட் நுழைவுத் தேர்வு முறைகேடு விவகாரத்தில் சிக்கிய இர்பான் நேற்று சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்நிலையில், சென்னை மருத்துவக் கல்லூரி இயக்ககத்தின் வழிகாட்டுதலின்படி, தருமபுரி மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாச ராஜு செப்டம்பர் 30ஆம் தேதி, இர்பானை மருத்துவக் கல்லூரியிலிருந்து நீக்கம் செய்து அதற்கான கடிதத்தைப் பதிவு அஞ்சலில் அனுப்பினார். இன்று அந்தக் கடிதம் பெறப்பட்டு, இத்தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.