டெல்லி: சரிதா விஹார் காவல்நிலையத்தில் இளம்பெண் ஒருவர் இளைஞர் மீது அளித்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
டெல்லி சரிதா விஹார் காவல்நிலையத்தில் இளம்பெண் அளித்த புகாரில், “எனது வீட்டில் இளைஞர் ஒருவர் குடியிருந்து வந்தார். அவர் தனது பெயரை ராகுல் எனக் கூறி என்னிடம் பழகினார். இதை உண்மை என்று நம்பி நானும் அவரிடம் பழகினேன். நாங்கள் இருவரும் உடல் ரீதியிலான தொடர்பு வைத்துக்கொண்டோம்.
இதற்கிடையில் அவர் என்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொண்டார். அப்போதுதான் அவர் பெயர் சாஹிப் அலி என்ற ராகுல் (20) என்பது எனக்கு தெரியவந்தது. தொடர்ந்து அவர் என்னை பாலியல் வன்புணர்வு செய்து வருகிறார்.
இந்நிலையில், அவரது தந்தை ஹசிஸ்யுன்னலா என்னிடம் தவறாக நடந்துகொண்டு பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சித்தார். இவர்கள் இருவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் விசாரணை நடத்தி சாஹிப் அலி என்ற ராகுல் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 376 (பாலியல் வன்புணர்வு), 366 (கடத்தல், கட்டாய கல்யாணம்), 354 (பெண் மீது தாக்குதல், குற்றச்சதி), 406 (நம்பிக்கை மீறல்) மற்றும் 34 (பொதுவான குற்ற நோக்கம்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பாதுகாப்பான இந்தியா வேண்டும் - கடும் குளிரில் தரையில் உறங்கி போராட்டம் நடத்திய பிகார் பெண்கள்