ETV Bharat / jagte-raho

மருத்துவமனையில் விசாரணை கைதி உயிரிழப்பு - பொதுமக்கள் மறியல்!

திருவள்ளூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உயிரிழந்ததால் காவல்துறையினரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Death of prisoner
Death of prisoner
author img

By

Published : Dec 21, 2020, 7:30 PM IST

திருவள்ளூர்: பள்ளிப்பட்டு அருகே கர்லப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவர் திராவிடர் கழகத்தில் மாவட்ட அமைப்பாளராக இருக்கிறார். அவரது மகன் சந்திரபோஸ்(32) தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் பள்ளிப்பட்டைச் சேர்ந்த பத்ரைய்யா என்பவரின் மகள் திவ்யா(23) என்பவருடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருப்பினும் இதுவரை குழந்தைகள் இல்லாத நிலையில் திவ்யாவை கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் விசாரணை கைதி உயிரிழப்பு

இந்நிலையில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி திவ்யா வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக திவ்யாவின் தந்தை பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அந்தப் புகாரில், எனது மகளை அவரது கணவர், மாமியார், மாமனார், மைத்துனர் ஆகியோர் குழந்தைகள் இல்லை என்று துன்புறுத்தி தொடர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளார்கள் எனக் கூறியிருந்தார்.

இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த பள்ளிப்பட்டு காவல்துறையினர், இறந்த திவ்யாவின் கணவர் சந்திரபோஸ் அவரது தந்தை பெருமாள், மைத்துனர் வீர பிரதாப் சிங் ஆகிய மூன்று பேரை கைது செய்து திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

திருவள்ளூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெருமாளுக்கு நேற்றிரவு(டிச.20) திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவரை காவல்துறையினர் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இளம்பெண் தற்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் முறையான விசாரணை மேற்கொள்ளாமல், இறந்த பெண்ணின் கணவர், மாமனார், மைத்துனர் ஆகியோரை கைது செய்த சம்பவத்தால், மன உளைச்சலுக்கு ஆளான பெருமாள் சிறையில் இருந்தபோது உடல்நலக் கோளாறு ஏற்பட்டு இறந்ததாக கூறி கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் இன்று(டிச.21) காலை காவல்துறையினரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் பள்ளிப்பட்டு சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருத்தணி டி.எஸ்.பி. குணசேகரன், ஆர்கே பேட்டை காவல் ஆய்வாளர் சுரேந்திரகுமார் பள்ளிப்பட்டு உதவி காவல் ஆய்வாளர் சதாசிவம் உள்பட காவல்துறையினர், வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர்.

தற்கொலை சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதியை ஏற்று சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

தற்கொலை சம்பவத்தில் விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது மாமனார் இறந்த சம்பவம் பள்ளிப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: நடிகை சித்ரா தற்கொலை விவகாரம் - சக நடிகை சரண்யாவிடம் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.