திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தாலுகா படியம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் (36) என்பவர், எடப்பாளையம் ஏரிக்கரை வழியே செல்லும் போது, அவரிடம் கத்தியைக் காட்டி செல்போன், ரூ.3,200 ஆகியவற்றை இருவர் பறித்துள்ளனர்.
இதையடுத்து, காவல்துறையில் வேல்முருகன் அளித்த புகாரின்பேரில் வழிப்பறியில் ஈடுபட்ட, விஜயகுமார், மணிகண்டன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். அவர்களிடமிருந்து செல்போன், பணம், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல், திருவண்ணாமலை தாலுகா, தேவனந்தல் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி (28) என்பவரின் கழுத்தில் கத்தியை வைத்து, அவரிடமிருந்த ரூ.1,000 பணத்தை வழிப்பறி செய்ததாக, சரவணன், விக்னேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து பணம், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், கூட்டுக்கொள்ளையில் ஈடுபட கும்பலாக உட்கார்ந்து சதித்திட்டம் தீட்டிய கணேஷ், சிவா, அனீப், மணிகண்டன், ரவிக்குமார், கணேசன், ரவீந்திரன் ஆகியோரையும் திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: மீட்பு விமானத்தில் வருவோர் மூலமும் நடைபெறும் தங்கக் கடத்தல் : 402 கிராம் தங்கக் கட்டிகள் பறிமுதல்