ETV Bharat / jagte-raho

தொழிலதிபர் மீது ஹர்பஜன் சிங் அளித்த புகார் மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றம்?

சென்னை: சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் மீது 4 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் காவல்துறையில் அளித்துள்ள புகார் மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்படும் எனக் கூறப்படுகிறது.

harbajan singh
harbajan singh
author img

By

Published : Sep 10, 2020, 7:21 PM IST

நீலாங்கரையை அடுத்த உத்தண்டியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் மகேஷ். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் அறிமுகம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு ஹர்பஜன் சிங்கிடம் 4 கோடி ரூபாயை மகேஷ் கடனாக பெற்றுள்ளார். ஐந்து ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 25 லட்ச ரூபாய்க்கான நிரப்பப்பட்ட காசோலையை, ஹர்பஜன் சிங்கிடம் மகேஷ் அளித்துள்ளார். ஆனால், அதனை வங்கியில் செலுத்திய போது பணமில்லாமல் திரும்ப வந்துள்ளது.

இதனையடுத்து, சூப்பர் கிங்ஸ் போட்டியில் கலந்து கொள்வதற்காக அண்மையில் சென்னை வந்த ஹர்பஜன் சிங், இது தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அப்புகார் மீது நீலாங்கரை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, உயர் நீதிமன்றத்தில் முன்பிணை கோரி தொழிலதிபர் மகேஷ் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், தானும், பிரபா சேகர் என்பவரும், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிடம், 4 கோடி ரூபாய் கடன் பெற்றதாகவும், அதற்கு அடமானமாக, தாழம்பூரில் உள்ள சொத்தை அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். தற்போது வரை, 4.05 கோடி ரூபாயை திருப்பி கொடுத்து விட்ட நிலையில், வைரஸ் பரவலால் வட்டி குறித்த பேச்சில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். பணம் கொடுக்க வேண்டாம் என வங்கியிடம் அறிவுறுத்தி இருந்ததால், காசோலை திரும்பியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

துன்புறுத்தும் நோக்கிலேயே ஹர்பஜன் சிங் தனக்கு எதிராக, புகாரளித்துள்ளதாகவும், எனவே தான் கைது செய்யப்படலாம் என்பதால், முன்பிணை வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இதற்கு உயர் நீதிமன்றம், இப்புகாரில் ஆரம்பக்கட்ட விசாரணையே நடைபெறுவதாகவும், வழக்குப்பதிவு செய்யும் பட்சத்தில், மனுதாரர் மீண்டும் முன்பிணை கோரலாம் என அறிவுறுத்தியுள்ளது.

4 கோடி ரூபாய் மோசடி என்பதால் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கொடுத்துள்ள இப்புகார், சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு விரைவில் மாற்றப்படலாம் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க: போதைப்பொருள் வர்த்தகத்தின் சந்தையான கன்னட சினிமா உலகம் - அதிர்ச்சி தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.