சென்னை: கல்லூரி மாணவன் ஒருவர் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம் (22). இவர் அதே பகுதியில் தங்கி தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி கலை பாரம்பரியம் படித்து வந்தார்.
கடந்த வருடம் குஜராத்தில் நடந்த கல்லூரி விழாவின் போது ஜீவானந்தம், சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி பார்கவி(21) என்பவரை சந்தித்துள்ளார்.
அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் ஜீவானந்தம் பார்கவியை ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பார்கவிக்கு அவரது பெற்றோர் திருமணத்திற்காக வரன் பார்த்து வந்துள்ளனர்.
இதனை அறிந்த ஜீவானந்தம் சென்னையில் வேலை உள்ளதாக பார்கவியிடம் பொய் கூறி அவரது வீட்டில் நான்கு நாள்கள் தங்கியுள்ளார்.
நான்கு நாள்கள் கடந்த நிலையிலும் ஜீவானந்தம் சொந்த ஊருக்கு செல்லாததால் நேற்றிரவு பெண்ணின் பெற்றோர்கள் கேட்டுள்ளனர்.
அப்போது ஜீவானந்தம் பார்கவியை பார்த்து நீ யாரையும் திருமணம் செய்து கொள்ள கூடாது, என மிரட்டியதுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் இன்று இரவு மட்டும் வீட்டில் தங்கி விட்டு செல்வதாக ஜீவானந்தம் தெரிவித்துள்ளார். இதற்கு ஒப்புக் கொண்ட பெண்ணின் பெற்றோர் ஜீவானந்தத்தை ஹாலில் தங்க வைத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று(அக்.3) காலை மூன்று மணியளவில் திடீரென ஜீவானந்தம், பார்கவி, அவரது பெற்றோர்கள் தூங்கி கொண்டிருந்த அறையில் கேஸ் சிலிண்டரை திறந்துவிட்டு அறையை மூடி தீ வைக்க முற்பட்டுள்ளார்.
அப்போது கேஸ் கசிவை உணர்ந்து உடனே எழுந்து பார்த்து அவர்கள் ஜீவானந்தத்தை அடித்து வெளியில் தள்ளி கதவை பூட்டினர். இதில் கோபமடைந்த ஜீவானந்தம் கதவை திறக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் கதவை திறக்காததால் ஜீவானந்தம் அருகிலிருந்த கண்ணாடியை எடுத்து உடைத்து தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
உடனே பெண்ணின் பெற்றோர் ஜீவானந்தத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வளசரவாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: கிணற்றில் தவறி விழுந்த இளைஞரை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்!