வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கோவிந்தபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரன் (68). 1997ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள கோழிப்பண்ணையில் வேலை செய்துவிட்டு ஓய்வுபெற்றுவிட்டார். தற்போது கோவிந்தபுரத்தில் உள்ள தனது தனி வீட்டில் வசித்துவருகிறார். இவரது இளைய மகள் சுபாஷினியின் நேர்முகத் தேர்வுக்காக டிசம்பர் 4ஆம் தேதி தனது குடும்பத்துடன் சிதம்பரம் சென்றிருந்தனர்.
இந்நிலையில் நேற்று (டிச. 05) பிற்பகல் வீடு திரும்பியபோது அடையாளம் தெரியாத நபர்கள் தங்களது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதில், பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியும் அத்தோடு சேர்ந்து இரண்டு கார்ட்ரிட்ஜ் (Cartridge), 31 தோட்டாக்கள், வீட்டில் இருந்த ரொக்கம் 3.5 லட்சம் ரூபாய், 30 சவரன் தங்க நகை, 4 கிலோ வெள்ளி பொருள்கள் ஆகியவை கொள்ளைபோயின.
இது குறித்து குடியாத்தம் டவுன் காவல் துறைக்கு அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கைரேகை வல்லுநர்களின் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக வேலூர் சரக டிஐஜி காமினி, வேலூர் காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டு விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: 'லா நினா' - இந்த ஆண்டு 'குளிர்' அதிகமாக இருக்கும்!