சென்னை செனாய் நகர் குடிசைப் பகுதியில் வசித்துவரும் 45 வயதுடைய பெண் கஸ்தூரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று சிறு வேலைகள் செய்துவருகிறார். இவருக்கு 22 வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட மகள் ஒருவர் உள்ளார்.
இந்நிலையில், கஸ்தூரில கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், "ஆகஸ்ட் 13ஆம் தேதி இரவு வீட்டில் நான் எனது மகளுடன் உறங்கிக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென கதவை உடைத்து மூன்று நபர்கள் உள்ளே நுழைந்தனர்.
பின்னர், அவர்கள் என்னை மிரட்டி, எனது மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பிச்சென்றனர்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி லிங்கம் (31), அவரது கூட்டாளிகளான ஆனந்த், சிவா ஆகியோர் வீட்டிற்குள் நுழைந்து பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் மீது பாலியல் வன்புணர்வு முயற்சி, வீடு புகுந்து மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் குற்றஞ்சாட்டப்பட்ட ரவுடி லிங்கத்திற்கும் கஸ்தூரிக்கும் திருமண பந்தத்தைத் தாண்டிய உறவு இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. ஆகையால் இச்சம்பவத்தின் உண்மை நிலை குறித்து அறிய காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஊத்தாப்பம் கேட்டு கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள்!
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவச் சோதனை அறிக்கை வந்த பின்னரே, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க முடியும் எனக் காவல் துணை ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் மீது பாய்ந்த போக்சோ!