சென்னை தாம்பரத்தில் ரெயில்வே பணிக்காக வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பலர் அப்பகுதியிலேயே தங்கி தற்காலிக பணயாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
இதில், இரவு நேரத்தில் அவர்கள் தூங்கும் போது தொடர்ந்து செல்போன்கள் திருடபட்டு வருவதாக சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றிரவு (டிச. 25) மீண்டும் வடமாநிலதவர்கள் இருவரின் செல்போனை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருட முயன்ற போது, கையும் களவுமாக பிடித்து சேலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் காவல் துறையினர் நடத்திய விசாரனையில் தாம்பரம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த எட்வர்ட் (20) என்பது தெறியவந்தது.
எட்வர்ட்டிற்கு கிறிஸ்துமஸ் கொண்டாட பணம் இல்லாததால் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புகொண்டார். இதையடுத்து இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எட்வர்ட்டை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க...‘ஸ்கேட்டிங் தளம் அமையுங்கள்...அப்புறம் பாருங்க பதங்கங்கள் குவியும்’ இளம் வீரர்களின் குரலுக்கு செவி மடுக்குமா அரசு?