ETV Bharat / jagte-raho

தாம்பரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் கைவரிசை: காவல் துறை விசாரணை!

சென்னை: தாம்பரம் அருகே அடுத்தடுத்து மருந்தகம் உள்பட நான்கு கடைகளில் அடையாளம் தெரியாத நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

தாம்பரம் அருகே அடுத்தடுத்து  மருந்தகம் உட்பட நாங்கு கடைகளில் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

author img

By

Published : Jan 8, 2021, 5:03 PM IST

சென்னை தாம்பரம் அடுத்த அகரம்தென் பிரதான சாலையில் உள்ள பாரத மக்கள் மருந்தகம் உள்பட இரண்டு தனியார் மருந்தகங்கள், தேநீர்க்கடை, துணிக்கடை என அடுத்தடுத்து ஐந்து கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உரிமையாளர்களிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில் கடைகளுக்கு வந்த உரிமையாளர்கள் சோதனை செய்தபோது, அரசு பாரத மக்கள் மருந்தகம் உள்பட மற்றொரு தனியார் மருந்தகம், தேநீர்க்கடைகளிலிருந்து சுமார் 20 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து துணிக்கடை, மற்றொரு தனியார் மருந்தகத்தின் பூட்டை உடைத்து வலி நிவாரணி மாத்திரைகள் திருடியிருப்பதும் தெரியவந்தது. பின்னர் கொள்ளைச் சம்பவம் குறித்து சேலையூர் காவல் துறையினருக்குப் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து அடையாளம் தெரியாத நபர்களைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க...பள்ளிகள் திறக்கவில்லை - திரையரங்கங்களுக்கு மட்டும் 100% அனுமதி எப்படி சாத்தியம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.