ETV Bharat / jagte-raho

காவல் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி - முன்னாள் காவலர் கைது

author img

By

Published : Dec 11, 2019, 8:50 PM IST

சென்னை: காவல் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியரிடம் 4 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Breaking News

சென்னை வேளச்சேரி விஜயநகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்(30). இவர் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், காவல் துறையில் பணியாற்ற விரும்பிய கார்த்திக், குடியாத்தம் பகுதியில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் மோகன் என்பவரை சந்தித்துள்ளார். அப்போது, உதவி ஆய்வாளர் பணி வாங்கித் தருவதாகவும் அதற்கு ஏழு லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் மோகன் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு மண்ணடியில் வைத்து கார்த்திக் நான்கு லட்ச ரூபாயை மோகனிடன் முன்பணமாக கொடுத்துள்ளார். இதனை நம்பிய கார்த்திக், காவலர் பயிற்சிக்கும் சென்றுள்ளார். ஆனால், உதவி ஆய்வாளர் பெயர் பட்டியலில் கார்த்திக்கின் பெயர் வராததால் மோகனிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், இது குறித்து வடக்குக் கடற்கரை காவல் நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்ததன் பேரில் மோகனை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: சதுரங்க வேட்டை படப்பாணியில் 100 கோடி பணமோசடி..!

Intro:Body:ஐடி ஊழியரிடம் போலிஸ் வேலை வாங்கி தருவதாக கூறி 4லட்சம் ரூபாய் மோசடி செய்த ஒய்வு பெற்ற உதவி ஆய்வாளர் கைது..

சென்னை வேளச்சேரி விஜயநகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(30).இவர் எம்.பி.ஏ படித்து முடித்து ஐடி கம்பெனியில் பணிப்புரிந்து வருகிறார். இந்த நிலையில் கார்த்திக்கு சிறுவயதிலிருந்தே போலிசாக பணிபுரிய வேண்டும் என்ற ஆசை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கார்த்திக் தந்தையின் நண்பரான ஜெகதீஷ் என்பவர் வேலூர் குடியாத்தம் பகுதியில் உள்ள ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் மோகன் என்பவரிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.பின்னர் மோகன் கார்த்திக்கிடம் உதவி ஆய்வாளர் பணி வாங்கி தருவதாகவும்,அதற்கு 7 லட்சம் ரூபாய் செலவாகும் என்று கூறியுள்ளார்.

பின்னர் கார்த்திக் முன்பணமாக 4லட்ச ரூபாயை 2015ஆம் ஆண்டு மண்ணடியில் வைத்து மோகனிடன் கொடுத்துள்ளார். பின்னர் இதனை நம்பி கார்த்திக் காவலர் பயிற்சிக்கு சென்ற பின்னர் உதவி ஆய்வாளரின் பெயர் பட்டியலில் கார்த்திக்கின் பெயர் வராததால் மோகன் என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். மேலும் கொடுத்த 4லட்சம் பணத்தை கேட்டால் மோகன் மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக கார்த்திக் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் போலிசார் மோகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.