வட சென்னையின் பிரபல ரவுடி கல்வெட்டு ரவியின் கூட்டாளி சம்பா சுரேஷ். இவரின் வலது கையான குருபிரசாத் (35), இவரின் நண்பர்கள் மதன் குமார் (36), பிரதீப் குமார் (27), விஜய் சாரதி (33) ஆகிய நான்கு பேரும், வடசென்னையில் முக்கிய ரவுடிகளாவர். இவர்கள் மேல் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பல வழக்குகளில் கைதாகி, புழல் சிறையில் இருந்தனர். சமீபத்தில் வெளியே வந்த இவர்கள் நான்கு பேரும் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல்கள் வந்தன. இதனையடுத்து வடசென்னை இணை ஆணையர் பாலாகிருஷ்ணன் உத்தரவின்படி, காவல் ஆய்வாளர் ஜவகர் தலைமையில் விஜய், தலைமை காவலர் முருகேஷ்வரண், விமல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது நான்கு பேரும் ராயபுரம் சிங்கார தோட்டத்தில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பதுங்கியிருந்த நான்கு பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க....கேட்பாரற்று கிடக்கும் வரலாற்றுச் சின்னமான ‘ஆயி மண்டபம்’ : கண்டுக்கொள்ளுமா அரசு!