ETV Bharat / jagte-raho

யூடியூப் பார்த்து கற்று கொள்ளையடித்த கல்லூரி மாணவன் கைது! - கல்லூரி மாணவன் கைது

சென்னை : யூடியூப் பார்த்து கற்று கொள்ளையடித்த கல்லூரி மாணவன், அவரது தாய் இருவரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

யூடியூப் பார்த்து கொள்ளையடித்த கல்லூரி மாணவன் கைது!

author img

By

Published : Aug 23, 2020, 10:12 AM IST

சென்னை, நங்கநல்லூர், 13ஆவது தெருவில் வசித்து வருபவர் இளவரசன் (வயது 33). இவர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஊரடங்கு காரணமாக தனது வீட்டைப் பூட்டி விட்டு, கடந்த மார்ச் 21ஆம் தேதி இவர் கோயம்புத்தூர் சென்று விட்டார். தொடர்ந்து, ஜூலை மாதம் 21ஆம் தேதி தனது வீட்டிற்குத் திரும்பி வந்து அவர் பார்த்தபோது, வீட்டின் இரும்பு கேட், மரக்கதவு, படுக்கையறையில் இருந்த இரண்டு பீரோக்கள் ஆகியவை உடைக்கப்பட்டு, 40 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்துள்ளன.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த இளவரசன், பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் காவல் துறையினர் அவரது வீட்டில் ஆய்வு செய்து, கொள்ளையர்களைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்துத் தேடி வந்தனர். சிசிடிவி கேமராக்களைக் கைப்பற்றியும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், கொள்ளைப் போன நேரத்தில் அப்பகுதியில் ஒரு ஆட்டோ மட்டும் செல்வது சிசி டிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது. மேலும், பக்கத்து தெருவில் ஒருவர் நடந்து செல்வதும் பதிவாகியிருந்தது. அந்த ஆட்டோவின் பதிவெண்ணை வைத்து ஆட்டோ ஓட்டுநரைப் பிடித்து விசாரித்ததில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை இறக்கிவிட்ட இடத்தை ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.

அத்தகவல்களின் அடிப்படையில், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது கல்லூரி மாணவன் விஜய் (வயது 23) என்பது தெரிய வந்தது. விஜய்யைப் பிடிக்க தனிப்படை காவல் துறையினர் பழவந்தாங்கல், நங்கநல்லூரிலிருந்து பல்லாவரம் வரை சுமார் 20 நாட்கள், 150 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். தொடர்ந்து அவரைக் கண்டறிந்து, அவரது வீட்டை ஜீலை 31ஆம் தேதி இரவு பல்லாவரத்தில் சுற்றி வளைத்தபோது, பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசி விஜய், காவல் துறையினரை அச்சுறுத்தியுள்ளார். தொடர்ந்து, குடியுருப்புவாசிகளும் அவரைப் பிடிக்க முயன்ற நிலையில், மூன்றாவது மாடியிலிருந்து குதித்து, இரண்டு கால்களும் முறிந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பல்லாவரம் காவல் துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய விஜய்யை, பழவந்தாங்கல் தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். நகைகளைக் கொள்ளையடித்து தனது தாயிடம் விஜய் கொடுத்திருந்த நிலையில், அவரது தாய் தனலட்சுமி (வயது 44) என்பவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 18 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், விஜய் குடிக்கு அடிமையாகி, போதைப் பழக்க வழக்கங்களில் ஈடுபட்டு, யூடியூப் பார்த்து கொள்ளையடிக்க கற்றுக் கொண்டது தெரிய வந்தது. மேலும், ஓலா மூலம் ஆட்டோ பிடித்துச் சென்று, பூட்டிய வீட்டை நோட்டமிட்டு, திட்டமிட்டு கொள்ளையடித்ததும் தெரிய வந்தது.

யூடியூப் பார்த்து கற்று கொள்ளையடித்த கல்லூரி மாணவன் கைது!

கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு தனக்குத் தேவையான கஞ்சா, மதுபானங்கள் ஆகிய பொருள்களை வாங்கியதாகவும் விசாரணையின் போது விஜய் வாக்கு மூலம் அளித்துள்ளார். வேளச்சேரி காவல் நிலையத்தில் லேப்டாப் திருடிய வழக்கு ஒன்றும் இவர் மேல் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தாய், கல்லூரி மாணவர் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க...போலி அலுவலர்கள் வேடத்தில் மளிகை கடையில் கொள்ளை: இளைஞர்கள் இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.