சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் வேணுகோபால் நகர் முதல் தெருவில் வசித்து வருபவர் செல்சியா (26). முதுநிலை பட்டதாரியான இவர், தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
செயின் பறித்த அடையாளம் தெரியாத நபர்!
இந்நிலையில், இன்று (டிச. 17) காலை செல்சியா மாத்திரை வாங்க வீட்டிலிருந்து மருந்து கடைக்கு புறப்பட்டார். பின்னர், மாத்திரைகளை வாங்கி விட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த போது, இளைஞர் ஒருவர் திடீரென வழிமறித்தார். இதனை சற்றும் எதிர்பாராத செல்சியாவின் கழுத்தில் இருந்த மூன்று சவரன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்சியா சப்தம் போட்டார். அவரது அலறல் சப்தம் கேட்டு வீடு, கடைகளில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். பின்னர், அவர்களில் சிலர் செயினை பறித்துக் கொண்டு ஓடிய அந்த நபரை, விரட்டிச் சென்றனர். ஆனால், அவர் தப்பி ஓடிவிட்டார்.
செயின் பறிப்பு குறித்து வழக்குப்பதிவு:
இது குறித்து திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் செல்சியா புகார் செய்துள்ளார். வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு, அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க...சென்னையில் கல்லூரி, மாணவர் விடுதிகளில் பரிசோதனை தீவிரம்!