ETV Bharat / jagte-raho

பூஜை செய்துகொண்டிருந்த மூதாட்டியிடம் தங்கநகை பறிப்பு! - தங்கச் சங்கிலியைப் பறித்தக் கொள்ளையர்கள்

வீட்டு வளாகத்தில் பூஜை செய்துகொண்டிருந்த மூதாட்டியிடம் ஆட்டோவில் வந்து நகை பறித்த இரண்டு கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

arrest
arrest
author img

By

Published : Dec 9, 2019, 3:56 PM IST

சென்னை நங்கநல்லூர் தில்லை கங்கா நகரில் கடந்த 30ஆம் தேதியன்று ருக்மணி என்ற 80 வயது மூதாட்டி தனது வீட்டு வளாகத்தில் உள்ள துளசி செடி அருகே பூஜை செய்துகொண்டிருந்தபோது ஆட்டோவில் வந்த இரண்டு கொள்ளையர்கள், மூதாட்டி அணிந்திருந்த நான்கு பவுன் தங்க சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடினர்.

பின்னர், இது குறித்து ருக்மணி ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரையடுத்து கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவிகளை காவலர்கள் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், கொள்ளையர்கள் வந்த அதே ஆட்டோ இன்று காலை நங்கநல்லூர் பகுதியில் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட வந்தபோது ஆதம்பாக்கம் காவல் துறையினர் அதைச் சுற்றிவளைத்தனர்.

அப்போது, மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், குமார் ஆகிய இருவரை கைது செய்த காவலர்கள், நான்கு பவுன் தங்கச்சங்கிலி, ஆட்டோவை பறிமுதல் செய்தனர். பின், கொள்ளையர்கள் இருவரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல்சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: தினமும் திருடலனா எனக்கு தூக்கம் வராது சார் - போலீஸை அதிரவைத்த கொள்ளையனின் பதில்!

Intro:வீட்டு வளாகம் உள்ளே பூஜை செய்த மூதாட்டியிடம் ஆட்டோவில் வந்து செயின் பறித்த 2 கொள்ளையர்கள் கைது:
Body:வீட்டு வளாகம் உள்ளே பூஜை செய்த மூதாட்டியிடம் ஆட்டோவில் வந்து செயின் பறித்த 2 கொள்ளையர்கள் கைது:

சென்னை நங்கநல்லூர் தில்லைகங்கா நகர் 28 வது தெருவில் கடந்த 30 ஆம் தேதியன்று ருக்மணி என்ற 80 வயது மூதாட்டி தனது வீட்டில் துளசி செடி அருகே பூஜை செய்த போது ஆட்டோவில் வந்த இரண்டு கொள்ளையர்கள் மூதாட்டி அணிந்திருந்த 4 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பியோட்டம் பிடித்தனர், பாதிக்கப்ப மூதாட்டி ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரை ஏற்று கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர், அதே ஆட்டோ இன்று காலை நங்கநல்லூர் பகுதியில் செயின்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட வந்த போது ஆதம்பாக்கம் போலீசார் மணிமங்கலம் பகுதியை சேர்ந்த சுரேஷ் மற்றும் குமார் ஆகிய இருவரையும் கைது செய்து 4 சவரன் செயின் மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்து விசாரணைக்கு பின் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல்சிறையில் அடைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.