சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம், காமராஜபுரம், எம்.ஜி ரோட்டை சேர்ந்தவர் ஆரோன் (35), தனியார் கம்பெனி ஊழியராக உள்ளார். இதற்கிடையில் கடந்த 19ஆம் தேதி நள்ளிரவு ஆரோன் வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பைக்கில் வந்த மூன்று பேர், அவரை வழிமறித்து பட்டாகத்தியால் சரமாரி வெட்டி செல்போனை பறித்து சென்றனர். இதனையடுத்து இது குறித்து ஆரோன் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் பட்டாபிராம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை வைத்து வழிப்பறி கொள்ளையர்களை காவல் துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில், இந்த வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட சென்னை, புளியந்தோப்பு, மூர்த்தி நகரைச் சேர்ந்த மனோஜ்(22), அவரது தம்பி மதன்குமார் (19), அவரது கூட்டாளியான அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (22) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர், அவர்களை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி. நள்ளிரவில் புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க...பள்ளி மாணவியுடன் செல்ஃபி எடுத்தவர் போக்சோவில் கைது!