ETV Bharat / jagte-raho

ஐடி நிறுவன தலைமை அலுவலர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு!

author img

By

Published : Oct 15, 2020, 12:23 AM IST

சென்னை: நீதிமன்ற உத்தரவின் படி தனியார் ஐடி நிறுவன தலைமை அலுவலர் மீதான மோசடி வழக்கை, பாலியல் வன்கொடுமை வழக்காக மாற்றி அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.

chennai
chennai

கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை அடையாறு காவல் நிலையத்தில் லண்டன் வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மருத்துவ ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், தன்னை திருமணம் செய்துகொள்வதாக மோசடி செய்து பாலியல் ரீதியாக கொடுமை செய்த தனியார் நிறுவன தலைமை அலுவலர் ராஜ்குமார் அய்யாசாமி என்பவர் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர்

இதுதொடர்பாக வழக்கறிஞர் பாட்ஷா செய்தியாளர்களிடம் கூறுகையில், லண்டனில் ராஜ்குமார் அய்யாசாமி தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். அப்போது, அய்யாசாமி முதல் திருமணம் செய்து விவகாரத்து பெற்றதாகக் கூறி, திருமணத்திற்கு முன்பு இவரிடம் வாட்ஸ்அப்பில் பாலியல் ரீதியாக பேசி வீடியோக்களை அனுப்பியுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின்பு அய்யாசாமி இவரை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தியுள்ளார். சென்னை வந்த பின்பு அவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் மோசடி செய்தது தெரியவந்தது. இதற்கு அவரது குடும்பத்தினரும் உடந்தையாக இருந்துள்ளனர். அவரை விட்டு விலக முயன்ற பெண்ணிடம், அய்யாசாமி போதை மருந்து கொடுத்து, ஆடை இல்லாமல் எடுத்த வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாகக் கூறி அப்பெண்ணை மிரட்டியுள்ளார்.

இதுதொடர்பாக காவல்துறையிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தற்போது, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் விசாரிப்பதற்கு பதிலாக, குற்றப்பிரிவு காவலர்கள் மோசடி வழக்கை மட்டும் பதிவு செய்து விசாரணை செய்துள்ளனர்.

இந்த வழக்கை முறையாக விசாரிக்காமல் கிடப்பில் போட்டதால், பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து மூன்று ஆண்டுகள் கழித்து அவசர அவசரமாக குற்றப்பத்திரிக்கையை அடையாறு காவல் நிலைய காவலர்கள் தாக்கல் செய்துள்ளனர். இதுதொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அப்பெண் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், தான் பாலியல் ரீதியாக கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக வீடியோ ஆதாரங்களுடன் சமர்ப்பித்தார்.

இவ்வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், மீண்டும் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில் வழக்கை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்" என்றார்.

இதையும் படிங்க: காவல் துறை, திரைப்பட நடன கலைஞர்களின் கரோனா விழிப்புணர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.