கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன். இவருடைய மகள் சந்தியாவுக்கும் விளக்கூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்தோஷ் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு ஒன்பது மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த 25ஆம் தேதி வீட்டை விட்டுச் சென்ற சந்தியா வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சலாவுதீன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் சந்தியாவின் உடல் மிதந்துள்ளது.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வரஞ்சரம் காவல் துறையினர் பெண்ணின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: