ETV Bharat / jagte-raho

பாஜகவுக்கு வாக்கு சேகரித்த முதியவர் கொலை! - bjp fanatic murder

தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே பாஜகவிற்கு ஆதரவாக வாக்கு கேட்டுச் சென்ற முதியவரை, இளைஞர் ஒருவர் அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக ஆதரவாளர் கோவிந்தராஜ்
author img

By

Published : Apr 16, 2019, 11:53 AM IST

பாஜக மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவரான கோவிந்தராஜ், அக்கட்சிக்கு ஆதரவாக ஒரத்தநாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தனியாக சென்று தீவர பரப்புரையில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வந்திருக்கிறார். செல்லும் இடங்களில் பார்ப்பவர்களை எல்லாம் "மோடிக்கு ஓட்டுப் போடுங்கள்" என்று சொல்வார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், கோவிந்தராஜ் ஒரத்தநாடு அண்ணா சிலை அருகே நேற்று முன்தினம் இரவு மோடியின் படத்தைக் கழுத்தில் போட்டுக்கொண்டு பாஜகவிற்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு நின்ற கண்ணந்தங்குடி மேலையூரைச் சேர்ந்த கோபிநாத் (33) என்பவர், கோவிந்தராஜைப் பார்த்து ,"எதற்கு மோடிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்கிறீர்கள்?" எனக் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்ற, ஆத்திரமடைந்த கோபிநாத் கோவிந்தராஜை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

இதனால், வலி தாங்க முடியாமல் கதறிய கோவிந்தராஜுக்கு தீடிரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனைக் கவனித்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி கோவிந்தராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கோவிந்தராஜின் மகள் அற்புதா, ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து, கண்ணந்தங்குடி மேலையூரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகம் கோபிநாத்தை காவல்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,ஏப்.15 – 

பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு சென்ற முதியவர் அடித்து கொலை – டிரைவர் கைது

 தஞ்சை அருகே பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் கோவிந்தராஜ்,75,. இவர் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை பண்ணை அலுவலக ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு திருமணமாகி 2 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர். இவர் பா.ஜ.,மீது  மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். இதனால் லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டனிக்கு ஆதரவாக ஒரத்தநாடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தனியாகவே சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார். செல்லும் இடங்களில் பார்ப்பவர்களை எல்லாம் மோடிக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்வாராம். இந்த நிலையில் கோவிந்தராஜ் ஒரத்தநாடு அண்ணா சிலை அருகே நேற்றுமுன்தினம் இரவு மோடியின் படத்தை கழுத்தில் போட்டு கொண்டு பா.ஜ.,க்கு ஆதரவாக பிரசாரம் செய்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு நின்ற கண்ணந்தங்குடி மேலையூரை சேர்ந்த கோபிநாத்,33, டிரைவரான இவர். எதற்கு மோடிக்கு ஆதரவாக  பிரசாரம் செய்கிறாய் என கூறி கோவிந்தராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து வாக்குவாதம் முற்றி கோபிநாத் ஆத்திரம் அடைந்து கோவிந்தராஜை சரமாரியாக அடித்து உதைத்தார். வலி தாங்க முடியாமல் கதறினார். நெஞ்சவலி ஏற்பட்ட நிலையில், மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார். இது பற்றி கோவிந்தராஜ் மகள் அற்புதா ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். இந்நிலையில், கண்ணந்தங்குடி மேலையூரை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் கோபிநாத்தை போலீசில் பிடித்து ஒப்படைத்தார். இதையடுத்து,கோபிநாத்தை போலீசார் கைது செய்தனர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டன.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.