ETV Bharat / jagte-raho

பாஜக நிர்வாகி ஓட ஓட விரட்டி படுகொலை : உறவினர்கள் சாலைமறியல்

author img

By

Published : Sep 16, 2020, 6:41 PM IST

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவரை கும்பல் ஒன்று ஓட ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

bjb
bjb

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள குந்துமாரணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாத் (35). இவர் பாஜகவில் ஒன்றிய இளைஞரணி தலைவராக பதவி வகித்து வந்தார். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு தனுஞ்செயா மற்றும் ருஷிகேஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ரங்கநாத்திற்கும், போத்தசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ரங்கநாத்தின் இளைய மகனான தனுஞ்செயாவின் பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் அவரது வீட்டில் கொண்டாடினார். அப்போது, அவரது வீட்டிற்குள் புகுந்த கும்பல் ஒன்று அவரை கடுமையாக தாக்கியதோடு, ஓட ஓட விரட்டி உருட்டு கட்டைகளாலும் பயங்கர ஆயுதங்களாலும் தாக்கிவிட்டி தப்பியோடியது. இதில், படுகாயமடைந்த ரங்கநாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கெலமங்கலம் காவல்துறையினர், கொலை குறித்து விசாரிக்க தொடங்கினர். அப்போது, ரங்கநாத்தின் உறவினர்கள் கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு பாஜக மாநில துணைத்தலைவர் நரேந்திரன், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக தலைவர் நாகராஜ் ஆகியோர் ரங்கநாத் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.

பின்னர் கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், தேன்கனிக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் சங்கீதா ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர் மற்றும் உதவி ஆய்வார் செல்வராகவன், உதவி ஆய்வாளர் பார்த்திபன், உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: குற்ற நோக்கத்துடன் பெண்களை பின்தொடர்ந்தால் 7 ஆண்டு சிறை - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.