சத்திரம் 13ஆவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தீபக். 102 ஆவது வட்ட பாஜக தலைவராக உள்ள இவர், தனது தங்கையின் பிறந்த நாளையொட்டி, கடந்த 6ஆம் தேதி இரவு 12 மணியளவில், நண்பர்களுடன் தெரு முனையில் கூடி கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது அருகில் வசிக்கும் அதிமுக வட்டச் செயலாளர் வசந்தகுமார் (47) என்பவர், தீபக் உள்ளிட்டோரை சத்தம் போடாமல் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனால் தீபக்கிற்கும் வசந்தகுமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவரின் நண்பர்களும் அங்கு சூழ்ந்து கொண்டு கடும் கூச்சலுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அக்கம்பக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள், டி.பி.சத்திரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர், இருதரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துப்பேசி எச்சரித்து எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பினர்.
இதையும் படிங்க: மதுபோதையில் நண்பர்களிடையே தகராறு: ஒருவருக்கு கத்திக் குத்து!