நாமக்கல் மாவட்டம் என்.புதுப்பட்டி அருகே உள்ள கிழக்குதெரு பகுதியில் ஒரு கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் பூட்டை அடையாளம் தெரியாத ஒருவர் உடைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த பொதுமக்கள், சந்தேகத்தின் பேரில் அவரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் ஏ.சி.டி நகர் பகுதியில் வசிக்கும் சரவணன் என்பதும், இருசக்கர வாகனத்தை அவர் திருட முயற்சித்ததும் தெரியவந்துள்ளது.
![namakkal pudhupatty bike target accust arrested பைக் திருடன் கைது நாமக்கல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4298402_namakkal--21.bmp)
இதனைத் தொடர்ந்து, அவரது வீட்டிற்குச் சென்று சோதனை செய்தபோது அங்கு பத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களின் போலியான ஆர்.சி புத்தகங்கள், வங்கி காசோலைகள், இரு சக்கர வாகனம் ஒன்று இருந்துள்ளது.
இதையடுத்து, அந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு அந்த வாகனத்தின் உரிமையாளரான நாமக்கல்லைச் சேர்ந்த பூமிபாலன் என்பவரைத் தொடர்பு கொண்டபோது கடந்த வாரம் தனது வாகனம் காணாமல் போனதாகத் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சரவணனை கைது செய்தனர்.